ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்
ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

பத்திரிகையாளர்களை அநாகரீக வார்த்தைகளால் பேசியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ராமதாஸ் பேசிய கருத்துகளுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் இணைச் செயலாளர் பாரதிதமிழன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வயது முதிர்ந்த ஒர் அரசியல் தலைவரின் வாய் உதிர்த்த அநாகரீக வார்த்தைகள் கண்டன அறிக்கையில் கூட குறிப்பிடக்கூடியதாக இல்லை என கூறியுள்ளார். ராமதாஸின் தரக்குறைவான பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கோபம், விரக்தி என உள்ளக் குமுறல்களை ஊடகங்கள் மீது கொட்டாதீர் என பொதுவாழ்வில் உள்ளவர்களுகு வலியுறுத்துவதாக சென்னை பத்திரிகையாளார் மன்றம் தெரிவித்துள்ளது. அரசியல்வாதிகள், காவல்துறையினர், அதிகாரிகள் எனப் பொதுவாழ்வில் உள்ளவர்கள் சமீபகாலமாக பத்திரிகையாளர்கள் மீது அமில- அநாகரீக வார்த்தைகளை பயன்படுத்துவதும், தாக்குதல் நடத்துவதும், மோசமாக நடந்துகொள்வதும் அதிகரித்து வருவதாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் கவலை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com