கண்காணிப்பு கேமராவில் பதிவான போரூர் கார் தீ விபத்து - விசாரணையில் அம்பலம்

கண்காணிப்பு கேமராவில் பதிவான போரூர் கார் தீ விபத்து - விசாரணையில் அம்பலம்

கண்காணிப்பு கேமராவில் பதிவான போரூர் கார் தீ விபத்து - விசாரணையில் அம்பலம்
Published on

சென்னை போரூர் அருகே உள்ள தனியார் கார் குடோனில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 150க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்ததை சென்னைக் கூடுதல் ஆணையர் நேரில் விசாரணை செய்தார்.

சென்னை மவுன்ட் - பூந்தமல்லி சாலையையொட்டி போரூர் பகுதியில் மருத்துவமனைக்கு எதிரே தனியாருக்கு சொந்தமான கார் குடோன் உள்ளது. சுமார் 35 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த குடோனை சுற்றியும் காம்பவுன்ட் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.நுழைவாயிலில் ஒரு செக்யூரிட்டி எப்போது இருப்பார். இந்த இடத்தின் ஒரு பகுதியில்  உடோ (utoo) எனும் தனியார் கால் டாக்சிக்கு சொந்தமான 211 கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இதில் புதிய மற்றும் பழைய கார்களும், தவனை முறையில் வாங்கி பணம் கட்ட முடியாததால் பறிமுதல் செய்யப்பட்ட கார்களும் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில் நேற்று மதியம் திடீரென காலி மைதானத்தில் ஏற்பட்ட தீ விபத்து கார்களுக்கு பரவி சுமார் 184 கார்கள் தீயில் எரிந்து நாசமானது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அனைத்தனர். இந்தச் சூழலில் இன்று காலை கூடுதல் கமிஷ்னர் தினகரன், இணை கமிஷ்னர் விஜயகுமாரி ஆகியோர் நேரில் சென்று அங்குள்ள காவலாளிடம் விசாரணை செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது காலி மைதானத்தின் ஒரு பகுதியில் தீ எரிந்து அப்படியே கார்களை நோக்கி தீ வருவது பதிவாகி இருந்தது. காவலாளிகள் அந்தத் தீயை அணைக்கும் முயற்சியில் காலதாமதமாக செயல்பட்டு வந்துள்ளனர். 

மேலும் காலி இடத்தின் பின் பகுதியிலுள்ள இடத்தில் சிலர் குடித்து விட்டு சிகரெட்டை பற்ற வைத்து அணைக்காமல் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயில் எரிந்த கார்களுக்கு வரிசைப்படி நம்பர் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் தடய அறிவியல் துறை துணை இயக்குனர் ராஜஸ்ரீ ரகுநாத் சம்பவ இடத்திற்கு வந்து தீ விபத்துக்கான தடயங்களை சேகரித்தார். பெரும்பாலான கார்களுக்கு இன்ஸ்சூரன்ஸ் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். அண்மையில் பெங்களூரு விமானப் படைத்தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் நூற்றுக்கணக்கான கார்கள் எரிந்து சேதமடைந்த நிலையில், தற்போது சென்னையில் அதேபோன்ற தீவிபத்து ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com