\
பாலத்தில் விபத்து : போலீசாரின் வாகனம் மீது விழுந்த லாரி

பாலத்தில் விபத்து : போலீசாரின் வாகனம் மீது விழுந்த லாரி

பாலத்தில் விபத்து : போலீசாரின் வாகனம் மீது விழுந்த லாரி
Published on

சென்னை போரூரில் நிகழ்ந்த விபத்தில், பாலத்திலிருந்து சரக்கு லாரி ஒன்று காவல்துறையின் வாகனத்தின் மீது கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அருகேயுள்ள பூந்தமல்லியிலிருந்து சோழிங்கநல்லூரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டிற்கு மளிகை மற்றும் காய்கறி பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற கண்டெய்னர் லாரியும், குன்றத்தூரிலிருந்து கழிவுநீர் ஏற்றி வந்த வாகனமும், போரூர் ரவுண்டானா பாலத்தில் மோதி விபத்துக்குள்ளாகின.

அப்போது, பொருட்களை ஏற்றி வந்த சரக்கு லாரி, நிலைதடுமாறி பாலத்தின் கீழ் நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது கவிழ்ந்தது. அந்த நேரம் போலீசாரின் வாகனத்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com