சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலை எப்போது முடிக்கப்படும்? - அமைச்சர் நிதின் கட்கரி ட்வீட்

சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலை எப்போது முடிக்கப்படும்? - அமைச்சர் நிதின் கட்கரி ட்வீட்
சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலை எப்போது முடிக்கப்படும்? - அமைச்சர் நிதின் கட்கரி ட்வீட்

“சென்னை துறைமுகம் – மதுரவாயல் சாலை 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும்” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தமிழகத்தில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் வழித்தடம் 2024 டிசம்பருக்குள் முடிக்கப்படும் என்றும் ரூ.5,800 கோடியில் 20.5 கி.மீ. சாலை 4 பிரிவுகளாக உருவாக்கப்பட்டு, சென்னை துறைமுகத்தில் துவங்கி, மதுரவாயல் சந்திப்பில் முடிகிறது.

மத்திய அரசின் முதன்மையான கதி சக்தி உள்கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியான இந்தத் திட்டம், தடையற்ற மல்டிமாடல் இணைப்பை உறுதி செய்யும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

“திட்டம் 2024 டிசம்பரில் நிறைவடையும், மேலும் இது சென்னை செல்லும் துறைமுகப் போக்குவரத்திற்கான தனித்த சரக்கு வழித்தடப் பாதையாக செயல்படும் மற்றும் சென்னை துறைமுகத்தின் கையாளும் திறனை 48 சதவிகிதம் அதிகரிக்கும், பின்னர் துறைமுகத்தில் காத்திருக்கும் நேரத்தை ஆறு மணி நேரம் குறைக்கும்,” என்று அவர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com