வேலையை விடும் காவலர்: ஏன்? கண்ணீருடன் கூறும் வீடியோ!

வேலையை விடும் காவலர்: ஏன்? கண்ணீருடன் கூறும் வீடியோ!

வேலையை விடும் காவலர்: ஏன்? கண்ணீருடன் கூறும் வீடியோ!
Published on

சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் தான் ஏன், வேலையை விடுகிறேன் என கண்ணீருடன் விளக்கியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணை காவல்நிலையத்தை சேர்ந்த காவலர் ஒருவர் தான் ஏன்? பணியில் இருந்து விலகுகிறேன் என முகநூலில் விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “நான் மதுரையை சேர்ந்தவர். கடந்த 10 வருடங்களாக காவலராக பணியாற்றி வருகிறேன். எனக்கு பிடித்துதான் இந்தப் பணியை செய்து வந்தேன். இந்நிலையில் திடீரென எனது மகனுக்கு காலில் அடிபட்டு அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதற்காக விடுப்பு கேட்பதற்கு ஆய்வாளரிடம் சென்றேன், எனது கோரிக்கை மறுக்கப்பட்டது. பின்னர் உதவி ஆணையரிடம் சென்றேன் அங்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வேறுவழியின்றி துணை ஆணையரிடம் சென்றேன், ஆனால் அங்கு மீண்டும் ஆய்வாளரிடம் செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். பின்னர் எனது மகன் உடல் நிலை மோசமடைந்ததால் வேறு வழியின்றி விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு சென்றேன். 10 நாட்கள் விடுப்பாகிவிட்டது. பின்னர் பணிக்கு வந்தால், உங்களுக்கு இங்கு பணி இல்லை, என்று கூறினார்கள். பேசியும் பலனில்லை. இதனால் வேறுவழியின்றி வேலை விடும் நிலை ஏற்படுகிறது. நான் மற்ற காவலர்கள் போல் தூப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொள்ளாமால், ஊருக்கு சென்று விவசாயம் செய்யப்போகிறேன். அல்லது கடை வைத்துப் பிழைக்கப்போகிறேன்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com