பாலியல் வழக்கில் 22 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்; சென்னை பெண் காவலர்களுக்கு பாராட்டு

பாலியல் வழக்கில் 22 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்; சென்னை பெண் காவலர்களுக்கு பாராட்டு
பாலியல் வழக்கில் 22 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல்; சென்னை பெண் காவலர்களுக்கு பாராட்டு

பாலியல் வழக்கில் 22 நாட்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து வழக்கை முடித்த பெண் காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.

சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகள் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 16 வயது சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து அவர் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கெல்லீஸ், இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடத்துவந்த நிலையில், ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த அந்தோணி விசித்ரா(தற்போது மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையம்), நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர்கள் ஜெய்சீலி, ஷீலா மற்றும் காவல் குழுவினர் 22 நாட்களில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தி, வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 31.08.2021 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

சிறுவனை ஒரு வருடம் பெற்றோர்கள் உரிய கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் கண்காணிக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். போக்சோ வழக்கில் விரைவாக விசாரணை செய்து 22 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து வழக்கை முடித்துவைத்த மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அந்தோணி விசித்ரா, நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர்கள் ஜெய்சீலி, ஷீலா ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (07.01.2022) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார்.

போக்சோ வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல்செய்து நீதிமன்றத்தில் வழக்கினை முடித்தமைக்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com