கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு சொந்த செலவில் உதவிய சென்னை கமிஷ்னர் !

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு சொந்த செலவில் உதவிய சென்னை கமிஷ்னர் !
கொரோனாவால் பாதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டருக்கு சொந்த செலவில் உதவிய சென்னை கமிஷ்னர் !


கொரோனாவால் உடல் நலம் மோசமடைந்த சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு மருந்து வாங்கிக் கொடுத்து உதவிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் மனிதநேயம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை நகரில் கொரோனா பரவலால் காவல்துறையினர் அதிக அளவில் பாதிப்படைந்து வருகின்றனர். இதுவரை சென்னையில் மட்டும் 585 போலீசார் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தனர். அவர்களில் 253 பேர் பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிப்படைந்த காவல்துறையினர் சென்னை ஐஐடி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாம்பலம் போலீஸ் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். முதலில் ஐஐடியில் சிகிச்சை பெற்ற அவர் உடல் மோசமானதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். உடல் நிலை மிகவும் மோசமானதால் மூச்சுத்திணறலால் அதிகமானது. அவருக்கு டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்கவில்லை.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி சோதனையில் உள்ள ACTEMRA tocilizumab எனும் மருந்தை மருத்துவர்கள் கடைசி கட்ட முயற்சியாக அவரது உடலில் செலுத்திப்பார்க்க பரிந்துரை செய்தனர். ஒரு தடுப்பூசியின் விலை ரூ.75 ஆயிரமாகும். 3 நாட்கள் இந்த தடுப்பூசியை போட வேண்டும். அப்படி போட்டால் அவர் உயிர்பிழைப்பார் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இந்த தகவல் சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே விஸ்வநாதனுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இந்த தடுப்பூசியைத்தான் தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் சிகிச்சையின் போது அனுப்பி வைத்திருந்தார். இதையடுத்து காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் உடனடியாக அந்த மருந்தினை காவல் ஆணையர் பாலமுரளிக்கு செலுத்த ஏற்பாடுகள் செய்யும்படி டாக்டர்களுக்கு தெரிவித்தார்.

தனது சொந்த செலவில் அந்த மருந்தை பாலமுரளிக்கு காவல் ஆணையர் வாங்கிக் கொடுத்தார். அந்த மருந்து தற்போது பாலமுரளிக்கு செலுத்தப்பட்டு அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தனது கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் ஒரு இன்ஸ்பெக்டருக்கு கமிஷனர் இவ்வளவு முயற்சி செய்து உயிரை காப்பாற்றியது அனைவர் மத்தியிலும் பாராட்டை பெற்றுள்ளது. கமிஷனர் விஸ்வநாதன் சென்னை ஐஐடி வளாகத்தில் சிகிச்சையில் உள்ள காவல் அதிகாரிகளின் சிகிச்சை மற்றும் அவர்களது உடல் நலன் குறித்து தினமும் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார்.

அவர்களில் யாருக்காவது இது போன்று சிக்கல்கள் வந்தால் உடனடியாக அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கி அதனை தீர்த்து வைப்பதில் மும்முரமாக ஈடுபடுகிறார். கடந்த வாரம் இதே போன்று ஒரு காவல் ஆய்வாளருக்கு கமிஷனர் விஸ்வநாதன் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கமிஷனரின் இந்த மனிதநேயம் மிக்க செயல்பாடுகள் குறித்து சமூகவலைதளங்களிலும் பாராட்டுக்கள் குவிகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com