திருமலா
திருமலா புதிய தலைமுறை

காவல்துறையினர் மிரட்டினார்களா?... திருமலா நவீன் மரண வழக்கில் காவல் ஆணையர் அருண் விளக்கம்!

ஆந்​திராவில், திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணியாற்றிய நவீன், ரூ.40 கோடி முறை​கேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளிச்சத்திற்கு ​தெரிய​வந்​தது.
Published on

திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் தற்​கொலை செய்து கொண்​டா​ரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்டன​ரா என்​ற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களை சந்தித்து பேசியிருக்கிறார்.

அதில், ” திருமலா நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலை போன்றுதான் உள்ளது. அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ததில் தற்கொலை என்றே தெரிகிறது. மேலாளர் நவீனை காவல் துணை ஆணையர் அலுவலகம் அழைத்து விசாரிக்கவில்லை.

நவீன் அனுப்பிய மின்னஞ்சலில் காவல் துறை மிரட்டியதாக எங்கும் குறிப்பிடவில்லை. காவல் துணை ஆணையர் பாண்டியராஜனுக்கு விடுமுறை கொடுத்தது நான் தான். துணை ஆணையர் பாண்டியராஜன் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக என்ன நடந்தது?

ஆந்​திராவில், திரு​மலா பால் நிறு​வனத்​தில் கடந்த மூன்​றரை ஆண்​டு​களாக கரு​வூல மேலா​ள​ராகப் பணியாற்றிய நவீன், ரூ.40 கோடி முறை​கேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது சமீபத்தில் வெளிச்சத்திற்கு ​தெரிய​வந்​தது. இதனை நவீனும் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்​பாக அந்​நிறு​வனம் சார்​பில் கடந்த மாதம் 25-ம் தேதி கொளத்​தூர் காவல் மாவட்ட துணை ஆணை​யர் பாண்​டிய​ராஜனிடம் புகார் தெரிவிக்​கப்பட்​டது. இதையடுத்​து, போலீ​ஸார் நவீனை நேரில் வரும்​படி கூறி போனில் அழைத்து விசா​ரித்​த​தாக​வும், அப்​போது, ‘பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன். என் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டாம்’ என போலீஸாரிடம் நவீன் கேட்​டுக் கொண்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது. இதுதவிர மேலும் சிலர் நெருக்கடி கொடுத்ததாகவும் தெரிகிறது.

திருமலா
உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த யுனெஸ்கோ.. செஞ்சி கோட்டை பற்றி வியக்கவைக்கும் தகவல்கள் இதோ!

இந்​நிலை​யில், கடந்த புதன்கிழமை இரவு அவர் வீட்​டருகே உள்ள குடிசை​யில் தூக்​கில் தொங்​கிய நிலை​யில் நவீன் சடமாகக் கிடந்தார். தகவல் அறிந்து வந்த புழல் போலீ​ஸார், உடலை மீட்டு பரிசோதனைக்​காக ஸ்டான்லி அரசு மருத்​து​வமனைக்கு அனுப்பி வைத்​தனர். போலீ​ஸ் விசா​ரணைக்கு பயந்து நவீன் தற்கொலை செய்து கொண்​டா​ரா அல்​லது யாரேனும் அவரை கொலை செய்து தூக்​கில் தொங்க விட்​டன​ரா என்​ற கோணத்தில் போலீஸார் விசாரணையை தொடங்கினர்.

மேலும், கடைசியாக நவீன் அவரது சகோதரி, அவர் பணி செய்த பால் நிறுவனத்துக்கும், 'என் மரணம் விரைவில் உங்கள் சாம்ராஜ்யத்தையே உலுக்கும் என்பதை நினைவில் கொள்க. எனக்குப் பின்னால் பல பெரிய மனிதர்கள் இருக்கிறார்கள்.' என்றெல்லாம் ஒரு கடிதத்தை எழுதி அதனை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com