ஸ்கூட்டர் திருடிய பெண் : காதலுக்காக மன்னித்து விட்ட இளைஞரின் கருணை

ஸ்கூட்டர் திருடிய பெண் : காதலுக்காக மன்னித்து விட்ட இளைஞரின் கருணை
ஸ்கூட்டர் திருடிய பெண் : காதலுக்காக மன்னித்து விட்ட இளைஞரின் கருணை

தன் காதலன் பிறந்த நாளை கொண்டாட இளைஞரை ஏமாற்றி ஸ்கூட்டரை திருடிச்சென்ற இளம்பெண் காவல்துறையிடம் பிடிபட்டார்.

சென்னை மணலியை சேர்ந்த தினேஷ் (24), நேற்று காலை ஏழுகிணறு பகுதியில் தனது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றுள்ளார். அப்போது அவரிடம் லிப்ட் கேட்பதுபோல், ஒரு இளம்பெண் வண்டியை நிறுத்தியுள்ளார். அவருக்கு லிப்ட் கேட்ட அப்பெண், தான் அதே பகுதியில் வசிப்பதாகவும், தன் தாய்க்கு உடல்நிலை சரியில்லை என்றும் கூறியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஸ்கூட்டர் வேண்டும் என்று அப்பெண் கூறியுள்ளார். தினேஷ் சற்று தயக்கம் காட்டவே, அப்பெண் தனது மொபைல் நம்பரை கொடுத்துள்ளார். அந்த நம்பருக்கு கால் செய்யவும், அப்பெண் கையில் இருந்த செல்போன் ரிங் அடித்துள்ளது. இதையடுத்து அப்பெண்ணிற்கு தனது இருசக்கர வாகனத்தை தினேஷ் கொடுத்து அனுப்பியுள்ளார்.

ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு அரைமணி நேரத்தில் வருவதாக கூறிய அப்பெண், நீண்ட நேரமாக திரும்பவேயில்லை. இதனால் அச்சமடைந்த தினேஷ் அந்த மொபைல் நம்பருக்கு கால் செய்துள்ளார். அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தினேஷ், அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அந்த நம்பரை ட்ராக் செய்து பார்த்தபோது, அது தடா எல்லைப்பகுதியில் இருந்துள்ளது. திரும்பவும் சில மணி நேரங்களுக்குப் பிறகு சென்னை எல்லைக்குள் வந்துள்ளது. உடனே வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், இளைஞர் ஒருவருடன் வந்த அப்பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது, தன் காதலனுக்கு பிறந்த நாள் என்றும், அவருடன் தான் தடா சென்றிருந்ததாகவும் கூறியுள்ளார். தங்களிடம் வண்டி எதுவும் இல்லாததால் தினேஷை ஏமாற்றி வண்டியை பெற்றுச்சென்றதாக கூறியுள்ளார். இதையடுத்து ஸ்கூட்டரை மீட்ட காவல்துறையினர், அதை தினேஷிடம் கொடுத்தனர். பின்னர் தினேஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அப்பெண் மற்றும் அவரது காதலனை எச்சரித்து விடுவித்தனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com