சாலை விதிகளை மீறும் ஃபுட் டெலிவரி ஆட்கள்: 616 பேர் மீது வழக்குப்பதிவு

சாலை விதிகளை மீறும் ஃபுட் டெலிவரி ஆட்கள்: 616 பேர் மீது வழக்குப்பதிவு

சாலை விதிகளை மீறும் ஃபுட் டெலிவரி ஆட்கள்: 616 பேர் மீது வழக்குப்பதிவு
Published on

போக்குவரத்து விதிகளை மீறியதாக ஆன்லைன் உணவு விநியோகிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த 616 பேர் மீது சென்னை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

அண்மைக்காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்த ஒன்றாக பார்க்கப்படுவது ஆன்லைன் உணவு டெலிவெரி நிறுவனங்கள். நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனங்களில் டெலிவெரி சேவை மூலம் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு வருகின்றனர். ஆர்டர் செய்யப்பட்டு குறிப்பிட்ட நேரத்துக்குள் உணவை வழங்க வேண்டுமென்று உணவு விநியோகிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதாக புகார் எழுந்தது. 

இதனையடுத்து விதிமீறுபவர்களை பிடிப்பதற்காக சென்னை காவல்துறை சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.  இதில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யப்பட்டு உணவு விநியோகிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்த 616 இருசக்கர வாகன ஓட்டிகள் மீது விதிகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com