ஆயுதங்களுடன் திரிந்த ரவுடி 'கல்வெட்டு' ரவி கைது

ஆயுதங்களுடன் திரிந்த ரவுடி 'கல்வெட்டு' ரவி கைது

ஆயுதங்களுடன் திரிந்த ரவுடி 'கல்வெட்டு' ரவி கைது
Published on

6 கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவியை போலீசார் நேற்று ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த போது கைது செய்தனர்.

சென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில், கண்ணன் ரோடு, மாநகராட்சி பள்ளி அருகில் கொருக்குப்பேட்டை போலீஸ் ஏட்டு ஆர்தலிங்கம் ரோந்து பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபர் கையில் கத்தியுடன் சர்வ சாதாரணமாக சென்றார். இதனைக் கண்ட ஆர்தலிங்கம் அவரை விரட்டிச் சென்று மடக்கிப் பிடிக்க முயன்றார். அப்போது அந்த நபர் கத்தியால், போலீஸ் ஏட்டு ஆர்தலிங்கத்தின் கையில் தாக்கி காயப்படுத்தி விட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து ஆர்தலிங்கம் கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த நபரை தேடி வந்தனர். விசாரணையில், போலீசை தாக்கி விட்டு தப்பியோடியது பிரபல ரவுடியான ரவி என்கிற கல்வெட்டு ரவி என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி கல்வெட்டு ரவியை கைது செய்தனர்.

இவர் மீது பல கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com