ரத்தப் பரிசோதனை செய்வதுபோல் நாடகமாடி செல்போன்களை திருடிக்கொண்டு ஓடிய நபர்.. மடக்கிப்பிடித்த போலீஸ்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் செயல்பட்டு வரும் ரத்தப் பரிசோதனை நிலையத்தில், ரத்தப் பரிசோதனை செய்வதுபோல் நாடகமாடி செல்போன்களை திருடிக்கொண்டு ஓடிய ராஜேஷ் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.
கைதான கொசு ராஜேஷ்
கைதான கொசு ராஜேஷ்புதியதலைமுறை

செய்தியாளர் - வண்ணை ரமேஷ்குமார்

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் லட்சுமி அம்மன் கோவில் பகுதி அருகே, திருவெற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் ஒமேகா என்ற பெயரில் ரத்தப் பரிசோதனை நிலையம் நடத்தி வருகிறார்.

ஒமேகா ரத்தப்பரிசோதனை நிலையம்
ஒமேகா ரத்தப்பரிசோதனை நிலையம்

இந்த பரிசோதனை மையத்தில் நேற்று முன்தினம் காலை நேரத்தில் வழக்கபோல லேப் டெக்னீசியன் மற்றும் இரண்டு பெண் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில், நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்கிற கொசு ராஜேஷ் தனக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அங்கு வந்துள்ளார்.

இவருக்கு அங்கிருந்த பிரீத்தா என்பவர் ரத்த மாதிரியை எடுத்துவிட்டு, ஊசி குத்திய இடத்தில் பஞ்சை வைத்து கையை மடக்கி வைத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். தொடர்ந்து, பக்கத்தில் இருந்து இருக்கையில் சென்று அமருமாறு கூறிவிட்டு, உள்ளே சென்று ரத்தப் பரிசோதனை மெஷினில் ரத்த மாதிரியை வைத்துவிட்டு திரும்பியுள்ளார்.

இந்த இடைவெளியில், இருக்கையில் சென்று அமருவது போன்று சென்ற ராஜேஷ், டேபிளின் மேல் இருந்த மூன்று செல்போன்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

கைதான கொசு ராஜேஷ்
“டாக்டர்.. உங்க ஷிப்ட் என்ன? எங்க இருக்கீங்க?” - நடைப்பயிற்சியின் போது ஆய்வுக்குசென்ற அமைச்சர் மா.சு

இதனையடுத்து, பரிசோதனை மைய உரிமையாளரான சரவணகுமார், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், திருவொற்றியூர் உதவி ஆணையாளரின் தனிப்படை போலீசார், ராஜேஷை தீவிரமாக தேடி வந்தனர். ஆர்.கே நகர் பகுதியில் வைத்து அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, கொடுங்கையூர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதியில் ஏற்கனவே இதே போல ரத்தப் பரிசோதனை நிலையங்களில் திருடிய 5 செல்களை ராஜேஷிடம் இருந்து கைப்பற்றினர். தொடர்ந்து, விசாரணைக்கு பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

கைதான கொசு ராஜேஷ்
ஆட்சியர் உத்தரவிட்டும் அகற்றப்படாத தீண்டாமை சுவர்.. அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக புகார்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com