தமிழ்நாடு
கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி - உடற்கூறாய்வில் வெளிவந்த உண்மை
கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி - உடற்கூறாய்வில் வெளிவந்த உண்மை
கழுத்தை நெரித்து கணவனை கொலை செய்துவிட்டு தற்கொலை என நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரை சேர்ந்த தணிகைவேல், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துகொண்டார் என அவரது மனைவி ரேகா வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் 3 தினங்களுக்கு முன்னர் புகார் அளித்திருந்தார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடற்கூறு ஆய்வறிக்கையில் கழுத்தை நெரித்து தணிகைவேல் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்தது. மனைவி மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை அழைத்து விசாரித்தனர். குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கணவரைக் கொன்றதை ரேகா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை திருவொற்றியூர் மகளிர் காவல் துறையினர் கைது செய்தனர்.