சென்னை செயின் திருடனை சிசிடிவி மூலம் மடக்கிப் பிடித்த போலீஸ்

சென்னை செயின் திருடனை சிசிடிவி மூலம் மடக்கிப் பிடித்த போலீஸ்

சென்னை செயின் திருடனை சிசிடிவி மூலம் மடக்கிப் பிடித்த போலீஸ்
Published on

சென்னை வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

சென்னை, புதுவண்ணாரப்பேட்டையில் சாலையில் நடந்து சென்ற கல்யாணி என்பவர் அணிந்திருந்த 3 பவுன் ‌சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பறித்துச் சென்றார். சிசிடிவி காட்சி மூலம் கொள்ளையனை அடையாளம் கண்ட காவல்துறையினர் அவரைத் தேடி வந்தனர். அதே நபர் திருவொற்றியூரில் சங்கிலி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. 

இந்த நிலையில் திருவொற்றியூர் சாத்தாங்காட்டில் அந்த நபர் சிக்கிக்கொண்டார். பிடிபட்டவர் சாத்தாங்காட்டைச் சேர்ந்த கார்த்திக் என காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் பல இடங்களில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com