சென்னை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

சென்னை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்

சென்னை: காசிமேட்டில் மீன் வாங்க குவிந்த மக்கள் - காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள்
Published on

சென்னை காசிமேட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர். ஞாயிற்றுக் கிழமை என்பதால் கொரோனா பரவலை மறந்து கூட்டம் அலைமோதியது.

சென்னையில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீன் வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர். டீசல் விலை உயர்வால், மீனவர்கள் குறைந்த படகுகளில் மீன் பிடிக்கச் சென்றதால் மீன்களின் வரத்தும் குறைந்துள்ளது. இதனால் மீன்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது.

அசைவ பிரியர்களால் அதிகம் வாங்கப்படும் வஞ்சிரம், வவ்வால், சூரை, பாறை, சங்கரா உள்ளிட்ட மீன்களின் விலை ரூ.1000 முதல் ரூ.1300 வரை விற்கப்படுகிறது. அதேபோல, சிறிய வகை மீன்களான நெத்திலி, தும்பிலி, மத்தி உள்ளிட்ட மீன்களின் விலையும் உயர்ந்துள்ளது.

இன்று விடுமுறை தினம் என்பதாலும், ஆடி மாதம் 3-வது வாரம் கூழ் ஊற்றும் நிகழ்வு என்பதாலும் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்துள்ளனர். இதனால் சமூக இடைவெளி காற்றில் பறந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com