தமிழ்நாடு
சென்னை: சேதமடைந்த சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
சென்னை: சேதமடைந்த சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதி
மழை ஓய்ந்து சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் சாலைகளில் புழுதி பறப்பதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.
தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் வடிந்த நிலையில், தார் சாலைகள் சேதமடைந்து புழுதி பறக்கும் நிலை உருவாகியுள்ளது. கொளத்தூர், திருமங்கலம், பாடி, அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.