\
"ரூ.12லட்சம் கொள்ளை - போலீஸ் விசாரணை"

"ரூ.12லட்சம் கொள்ளை - போலீஸ் விசாரணை"

"ரூ.12லட்சம் கொள்ளை - போலீஸ் விசாரணை"
Published on

இரு சக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட நிகழ்வின் சிசிடிவி கேமரா பதிவு வெளியாகியுள்ளது.

சென்னை பாரிமுனை ஆண்டர்சன் தெருவை சேர்ந்தவர் அகமது ஜாவித் மொகைதீன் கான். இவர் தன்னிடமிருந்த 12 லட்சம் ரூபாய் பணத்தை இரு சக்கர வாகன சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு சென்றுள்ளார். இதை கவனித்து 2 பேர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு மொகைதீன்கான் சென்ற வேளையில், சீட்டின் கீழ் வைக்கப்பட்டிருந்த பணத்தை அவர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளதையடுத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com