தலைநகரில் இருந்து எவ்வளவு தூரம்?.. சர்வதேச விமான நிலையங்கள் குறித்த ஓர் பார்வை!

தலைநகரில் இருந்து எவ்வளவு தூரம்?.. சர்வதேச விமான நிலையங்கள் குறித்த ஓர் பார்வை!
தலைநகரில் இருந்து எவ்வளவு தூரம்?.. சர்வதேச விமான நிலையங்கள் குறித்த ஓர் பார்வை!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைய உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் சென்னை நகரின் முக்கிய இடங்களான கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் சென்ட்ரல் போன்ற பகுதிகளில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைய உள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் உள்ள முக்கிய நகரங்களில் இருந்து விமான நிலையம் எவ்வளவு தூரத்தில் அமைந்துள்ளது என்பது குறித்து காணலாம்.

1. மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் நகரின் மையப் பகுதியில் இருந்து - 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

2. சென்னையில் தற்போது அமைந்துள்ள அண்ணா (மீனம்பாக்கம்) பன்னாட்டு விமான நிலையம் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

3. கொல்கத்தாவில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையம் 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

4. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் 22கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

5. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

6. பெங்களூரில் உள்ள கேம்பகௌடா சர்வதேச விமான நிலையம் நகரின் மையப் பகுதியில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

7. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் விமான நிலையம் - 21 கிலோமீட்டர்

8. பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சர்வதேச விமான நிலையம் - 24 கிலோமீட்டர்

9. இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையம் - 26 கிலோமீட்டர்

10. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரின் விமான நிலையம் - 29 கிலோமீட்டர்

11. இந்நிலையில் தற்போது அமைய உள்ள சென்னையின் இரண்டாவது விமான நிலையம் நகரின் மையப்பகுதியில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட உள்ளது.

12. இது தற்போது உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சென்னையின் பரந்தூர் விமான நிலையம் 59 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

எனவே பரந்தூரில் விமான நிலையம் அமைக்கப்பட்டால் சென்னை நகரில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு, மெட்ரோ ரயில், புறநகர் ரயில், சிறப்பு வழி சாலைகள் போன்றவை முன் கூட்டியே அமைக்க வேண்டும். அப்போதுதான் பெரும்பாலான மக்கள் மற்றும் பயணிகள் பயன்படுத்த கூடிய சாத்தியம் உண்டாகும் எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com