சென்னை: காதலுக்கு எதிர்ப்பு... தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி!
வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் விஷம் குடித்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேடவாக்கத்தை அடுத்துள்ள அரசங்கழனி பகுதியில் பெங்களூரை சேர்ந்த அவினாஷ் (31) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவுக்கார பெண் கல்லூரி மாணவி பல்லவி (22) என்பவரும் கடந்த ஒன்றரை வருடமாக காதலித்து வந்துள்ளனர்.
வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய இருவரும் சித்தாலபாக்கத்தில் உள்ள அவினாஷின் அக்கா வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டிலிருந்து புறப்பட்டவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து பெரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

