எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 6 நாட்களுக்குத் தொடரும்: துறைமுக அதிகாரிகள்

எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 6 நாட்களுக்குத் தொடரும்: துறைமுக அதிகாரிகள்

எண்ணெய் படலத்தை அகற்றும் பணி 6 நாட்களுக்குத் தொடரும்: துறைமுக அதிகாரிகள்
Published on

சென்னை எண்ணூரில் கடற்பரப்பில் பரவியிருக்கும் எண்ணெய்‌ப் படலத்தை அகற்றும் பணி இ‌ன்னும் 6 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாவது நாளாக எண்ணெய்க் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 146 டன் அளவிற்கு எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ‌அதிநவீன கருவிகளை கொண்டு எண்ணெய் கழிவுகளை அகற்றுவதில் சிக்கல் இருப்பதால் கைகளாலேயே அகற்றப்பட்டு வரு‌வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 2 நாட்களில் கடற்பரப்பில் உள்ள எண்ணெய்க் கழிவுகள் அகற்றப்படும் என்‌றும், பாறைகளில் படி‌ந்துள்ள எண்ணெய்க் கழி‌வுகளை அகற்ற 4 நாட்கள் தேவைப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால், எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணி 6 நாட்கள் தொடரும் என துறைமுக அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com