தமிழ்நாடு
நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்: 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
நீட் தேர்வுக்கு எதிராக மாணவிகள் போராட்டம்: 3 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கக்கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்ட மாணவிகள், அனிதாவின் மரணத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என முழக்கமிட்டனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மாணவிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மாணவிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்த கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்ததால், பள்ளி வாயில் முன் திரண்ட மாணவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைதான மாணவர்களை விடுவிக்கும்வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 மாணவர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.