இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக களமிறங்கிய புதுமண தம்பதிகள்
இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக களமிறங்கிய புதுமண தம்பதிகள்pt desk

சென்னை | தமிழ் வாழ்க... இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக களமிறங்கிய புதுமண தம்பதிகள்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக களம் இறங்கிய புதுமண தம்பதிகள். தமிழ் வாழ்க என கையில் பதாகையுடன் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த திட்டத்திற்கு ஆதரவாக தமிழக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பூவிருந்தவல்லி அடுத்த நசரத்பேட்டையில் தமிழ் செல்வன் - சிவரஞ்சனி ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில், மணமக்கள் ஆத்திச்சூடி ,திருக்குறள் உள்ளிட்ட தமிழ் புத்தகங்களை சிறுவர்களுக்கு பரிசாக வழங்கினர்

இருமொழிக் கொள்கைக்கு ஆதரவாக களமிறங்கிய புதுமண தம்பதிகள்
புதுச்சேரி | குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2500 உதவித்தொகை! நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு

இதையடுத்து தமிழ் வாழ்க என்ற பதாகையை கையில் ஏந்தியபடி மும்மொழிக் கொள்கைக்கு எதிராக முழக்கமிட்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இது திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com