பணிக்கு சென்று வீடு திரும்பாத மகள்: பதறும் தந்தை!
பணிக்கு சென்ற தன் மகளை காணவில்லை என நீலாங்கரை காவல் நிலையத்தில் முருகன் என்பவர் புகார் அளித்துள்ளார்.
சென்னை தாம்பரம் பகுதியில் உள்ள முருகன் என்பவரின் மகள் கனிமொழி (24). இவர் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று காலை பணிக்கு சென்ற தன் பெண், இதுவரையில் வீடு திரும்பவில்லை என நீலாங்கரை காவல்நிலையில் முருகன் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், “பணிக்கு சென்ற எனது மகளை காணவில்லை. பணிக்கு செல்லும் பெண்கள் கடத்தப்படுவதும், தாக்கப்படும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், என மகளை நினைத்து பயமாக உள்ளது. எனவே விரைந்து எனது மகளை மீட்டுத்தாருங்கள்” என்று கோரியுள்ளார்.
கடந்த மாதம் சென்னை பெரும்பாக்கத்தில் பெண் ஐ.டி ஊழியர் லாவண்யாவை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம், நினைவிலிருந்து விலகுவதற்கு அதற்குள் மற்றொரு பெண் ஊழியரை காணவில்லை என புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.