பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிமுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
கோவை 95-வது வார்டில் பரப்புரை செய்ய அனுமதி மறுத்ததாகக் கூறி, பாஜக தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளர் வேலூர் சையது இப்ராஹிம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு விவரங்களை மனுவில் தெரிவிக்காததால் கண்டனம் தெரிவித்து வேலூர் இப்ராஹிமுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க: 'புர்கா' குறித்து சர்ச்சைப் பேச்சு - மன்னிப்புக் கேட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ