\
பொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

பொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு

பொங்கல் பண்டிகை: சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது

பொங்கல் பண்டியைகை முன்னிட்டு சென்னையில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு படை எடுப்பார்கள். இதனால் சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன.

இதற்காக மாதவரம், கே.கே நகர், தாம்பரம் சானிடோரியம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்ல ஏதுவாக, சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. இன்றிலிருந்து நாளை மறுநாள் வரை (ஜனவரி 11,12,13) 24 மணி நேரமும் கூடுதலாக 310 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com