சென்னை: காணாமல்போன வடமாநில சிறுவன்; பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி

சென்னை: காணாமல்போன வடமாநில சிறுவன்; பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி

சென்னை: காணாமல்போன வடமாநில சிறுவன்; பத்திரமாக மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்த தொழிலாளி
Published on

காணாமல்போன் 4 வயது சிறுவனை ஒன்றரை மணி நேரத்தில் போலீசார் மீட்டனர். சிறுவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த முடி திருத்தும் நபரை காவல் ஆய்வாளர் பாராட்டினார்.

சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ள பம்மல் மூங்கில் ஏரி பகுதியில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருபவர் ராஜீ குமார் ராம் (30). பீகார் மாநிலத்தை சேர்ந்த இவரது 4 வயது மகன் அங்குஷ்குமார். 22-ம் தேதி மாலை வீட்டில் இருந்தபோது காணாமல் போயுள்ளான். எங்கு தேடியும் கிடைக்காததால், சங்கர் நகர் காவல் நிலையத்தில் ராஜீ குமார் ராம் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் அக்கம்பக்கத்தில் தேடிவந்த நிலையில், ஒன்றரை மணி நேரம் கழித்து சிறுவனுடன் பல்லாவரம் காவல் நிலையத்திற்கு வந்த முடி திருத்தும் தொழிலாளி சிறுவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். குழந்தையை பத்திரமாக ஒப்படைத்த நபரை பல்லாவரம் ஆய்வாளர் வெங்கடேசன் பாராட்டினார்.

பின்னர், பல்லாவரம் போலீசார் சிறுவனை சங்கர் நகர் போலீசாரிடம் ஒப்படைத்த பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டான். காணாமல்போன சிறுவன் கிடைத்ததால் வடமாநில தம்பதி மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com