சென்னை: தியேட்டரில் ஏற்பட்ட பிரச்னை; தட்டிக்கேட்ட அமைச்சரின் மகன், பேரனை தாக்கிய மர்ம நபர்கள்!

சென்னையில் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் மற்றும் பேரன் ஆகியோரை 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் தாக்கியதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
kkssrr
kkssrrpt web

சென்னை தியாகராய நகர் ஏஜிஎஸ் திரையரங்கில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் ஆகியோர் குடும்பத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 பெண்கள் உட்பட 6 மர்ம நபர்கள் திரையரங்கில் அதிக சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அதனை அமைச்சரின் மகன் ரமேஷ் மற்றும் பேரன் ஆகியோர் தட்டிக் கேட்டள்ளனர். போது வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ags cinemas
ags cinemaspt desk

இந்நிலையில், படம் பார்த்துக் கொண்டிருந்த அமைச்சரின் மகன் மற்றும் பேரன் ஆகியோரை அந்த மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த அமைச்சரின் பேரன் மற்றும் உறவினர் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com