சென்னை எல்லை இனி அரக்கோணம் வரை!

சென்னை எல்லை இனி அரக்கோணம் வரை!

சென்னை எல்லை இனி அரக்கோணம் வரை!
Published on

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத் திட்டப்பகுதியின் எல்லை, அரக்கோணம் வரை விரிவாக்கம் செய்யப்படுவதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அறிவித்தார். 
சென்னையில் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை நெருக்கத்தைக் குறைக்கவும், புறநகர் பகுதிகளில் அதிவேகமாக நகரமயமாகி வரும் பகுதிகளில் ஏற்பட்டுவரும் வளர்ச்சியை ஒழுங்குப்படுத்தவும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பேரவையில் கூறினார். 
இதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் வட்டத்தையும் உள்ளடக்கி, 8,887 சதுர கி.மீ அளவில் சென்னை பெருநகர திட்டப்பகுதியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் இந்த விரிவாக்கம், ஒருங்கிணைந்த நகர் மயம் ஆவதை உறுதி செய்யவும் சமமான வளர்ச்சியை, விரிவுபடுத்தப்பட்ட பகுதியில் ஏற்படுத்தவும் மண்டல வியூகத் திட்டம் தயாரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com