சென்னை எல்லை விரிவாக்கம்: மும்பை அதிகாரிகளுடன் ஆலோசனை!

சென்னை எல்லை விரிவாக்கம்: மும்பை அதிகாரிகளுடன் ஆலோசனை!

சென்னை எல்லை விரிவாக்கம்: மும்பை அதிகாரிகளுடன் ஆலோசனை!
Published on

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வின் எல்லை பரப்பை 8,878 சதுர கி.மீ., விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆரம்பக்கட்டப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளை உள்ளடக்கிய 1,189 சதுர கி.மீ. பரப்பில், சென்னை பெருநகர் பகுதி உள்ளது. இதுவே, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வின் எல்லையாக உள்ளது. 'இதை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள், வேலுார் மாவட்டத்தில், அரக்கோணம் தாலுகாவை உள்ளடக்கிய, 8,878 சதுர கி.மீ. ஆக விரிவாக்கம் செய்யப்படும்' என  சட்டப் பேரவையில் தமிழக அரசு அறிவித்தது.

இதையடுத்து, விரிவாக்க திட்டத்தை செயல்படுத்தும் ஆலோசனை பணிகளை அதிகாரிகள் துவக்கியுள்ளனர். முதல் கட்டமாக, மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி குழுமமான, எம்.எம்.ஆர்.டி.ஏ. அதிகாரிகள் சி.எம்.டி.ஏ. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் மும்பையில் மேற்கொள்ளப்பட்ட விரிவாக்கம் பற்றியும் எப்படி செயல்படுத்தப்பட்டது என்பதையும் விளக்கினர். இதில் தமிழக வீட்டுவசதி துறை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் விஜயராஜ் குமார், தலைமை திட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com