இன்று முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மெட்ரோ ரயில்

இன்று முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மெட்ரோ ரயில்
இன்று முதல் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை மெட்ரோ ரயில்

சென்னையில் இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் மெட்ரோ ரயில்கள், வார நாட்களில் காலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமையில் காலை 7 மணி முதல் 10 மணி வரையும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, இன்று முதல் அனைத்து நாட்களிலும் காலை 5 மணியில் இருந்து இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ நிர்வாகம் அளித்திருக்கும் தகவலின்படி, `இனி திங்கள் முதல் சனிக்கிழமை வரை, நெரிசல் மிகுந்த நேரங்களில், 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 10 நிமிட இடைவெளியிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com