சென்னை: தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
சென்னை: தீபாவளியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மெட்ரோ ரயில் சேவை நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நாளை(2.11.2021) மற்றும் நாளை மறுநாள் ( 03.11.2021) நள்ளிரவு 12 மணி வரை சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. நெரிசல் மிக்க நேரங்களான மாலை 5 மணி முதல் 8 மணிவரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவை, இந்த இரண்டு நாட்களிலும் 10 மணிவரை தொடரும். இவ்விரு நாட்களில் 11 முதல் 12 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கடும்” என அறிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com