தமிழ்நாடு
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்
மெட்ரோ ரயில் சேவை, இனி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 மணிக்கு தொடங்கும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விரைவான போக்குவரத்திற்காகவும், வாகன நெரிசலை கட்டுப்படுத்தவும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வரப்பட்டது. வார நாட்களில் சென்னை மெட்ரோவில் ஏராளமான பயணிகள் பயணம் செய்வதைவிட ஞாயிற்றுக்கிழமையில் அதிகம் பேர் பயணம் செய்வதாக தெரிகிறது.
இதன் காரணமாக வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் சேவைகள் இயங்கி வந்தது. இந்நிலையில், பயணிகள் கோரிக்கையை ஏற்று விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளில் இனி காலை 6 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்க முடிவெடுத்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது

