சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு புதிய பெயர்கள்!

சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு புதிய பெயர்கள்!

சென்னை : மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு புதிய பெயர்கள்!

சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2003 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசால் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 18,380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோயம்பேடு - ஆலந்தூர் வழித்தடங்களில் 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான வழித்தடத்திலும், ஆலந்தூர் முதல் பரங்கிமலை வரையிலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன.

அதையடுத்து அதிமுக அரசு நடவடிக்கையால் 2017 ஆம் ஆண்டு மேமாதம் கோயம்பேடு முதல் நேரு பூங்கா வரை 7 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. 2018 மே மாதம் நேரு பூங்கா முதல் சென்ட்ரல் வரையிலான வழித்தடத்திலும், சின்னமலை முதல் டிஎம்.எஸ் வரையிலான வழித்தடத்திலும் 6 மெட்ரோ நிலையங்கள் திறக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டிஎம்.எஸ் முதல் வண்ணார்பேட்டை வரையிலான வழித்தடங்களில் 7 மெட்ரோ நிலையங்களை பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சென்னை சென்ட்ரல் மெட்ரோ, கோயம்பேடு மெட்ரோ, ஆலந்தூர் மெட்ரோ நிலையங்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் இடமாக மாறியுள்ளது. இதனால் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும், ஆலந்தூர் மெட்ரோ என்பது அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ என்பதை புரட்சித்தலைவி டாக்டர் ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம் மெட்ரோ என்றும் பெயர் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com