சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தேசிய விருது
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு தேசிய விருதுx

சிறந்த சேவைக்காக 2 தேசிய விருதுகள்.. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கௌரவிப்பு!

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இந்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் (MoHUA) இரண்டு முக்கிய விருதுகளால் கௌரவிக்கப்பட்டுள்ளது.
Published on

மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புறவிவகார அமைச்சகத்தால் இரண்டு முக்கிய தேசிய விருதுகளால் சென்னைமெட்ரோ ரயில் நிறுவனம் கௌரவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருதும், சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்தி அளிக்கும் மெட்ரோ ரயில் என்ற பிரிவில் பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்தவிருதுகள் ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெற்ற நகர்ப்புற போக்குவரத்து இந்தியா மாநாடு நிறைவு விழாவில் வழங்கப்பட்டன.

மத்தியஅமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் இணை அமைச்சர் தோக்கன் சாகு விருதுகளை வழங்கினர். தமிழ்நாடு போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே. கோபால் மற்றும் சென்னை மெட்ரோ மேலாண்மை இயக்குனர் எம்.ஏ. சித்திக் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com