மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்

மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்
மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து: ஒருவர் படுகாயம்

மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கிழே விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் கிழே விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயம் அடைந்தார். சென்னை ஷெனாய்நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரயிலுக்காக காத்திருந்தபோது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் மேற்கூரையில் பதிக்கப்பட்டிருந்த டைல்ஸ் பெண் பயணி மீது விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்த பெண் பயணியை அருகே இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.

இந்நிலையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தினர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com