பண்டிகை காலத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணிக்க, 20 சதவித கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை தினம் மற்றும் தொடா் விடுமுறையை சிறப்பிக்கும் விதமாக சென்னை மெட்ரோ நிறுவனம் சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை கட்டண சலுகை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினசரி பயணச்சீட்டு, டோக்கன்கள், ஸ்மார்ட் அட்டைகளுக்கு 20 சதவிகித கட்டணச் சலுகை பொருந்தும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.