ராட்சத ஃபேன், ஸ்பெஷல் டைல்ஸ், அவசர வழி... இது மெட்ரோ ஸ்பெஷல்!

ராட்சத ஃபேன், ஸ்பெஷல் டைல்ஸ், அவசர வழி... இது மெட்ரோ ஸ்பெஷல்!

ராட்சத ஃபேன், ஸ்பெஷல் டைல்ஸ், அவசர வழி... இது மெட்ரோ ஸ்பெஷல்!
Published on

சென்னை திருமங்கலம் - நேரு பூங்கா இடையே, மெட்ரோ ரயில் சேவை இன்று தொடங்குகிறது. முதல் முறையாக தமிழகத்தில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் பயணிக்க உள்ளது.

இந்த சுரங்கப்பாதையில் உள்ள மெட்ரோ நிலையங்களில் காற்றோட்ட வசதிக்காக ராட்சத விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரு நிலையத்துக்கு 8 என்கிற அளவில் பொருத்தப்பட்டுள்ள இந்த ராட்சத விசிறிகள் வெளிக்காற்றை உள்ளிழுத்து காற்றோட்ட வசதியை ஏற்படுத்துகின்றன.

ஒவ்வொரு நிலையத்தின் நீள, அகலம் மற்றும் மக்கள் கொள்ளளவிற்கு ஏற்றவாறு இந்த வி்சிறிகளில் காற்றின் வேகம் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அவசர காலத்தில் பயணிகள் வெளியேற 250 மீட்டருக்கு ஒரு குறுக்கு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை வழியாக ஒரு குறிப்பிட்ட நிலையத்தின் வழியே செல்லும்போது ஏதாவது தடங்கல் ஏற்பட்டால், பயணிகள் இந்த பாதைகள் வழியே அடுத்த நிலையத்திற்கு சென்றுவிட முடியும்.

இதேபோல், தீயணைப்பு வசதிகள், திடீர் தீயால் ஏற்படும் புகை போன்றவற்றை வெளியேற்ற புகை வெளியேற்றும் சிறப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான மின் தூக்கிகள், கண்பார்வையற்றோர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. நடைமேடையிலிருந்து ரயிலில் ஏறும்போது விபத்து ஏற்படுவதைத் தடுக்க, ரெயில் கதவுகளுக்கும் நடைமேடைக்கும் இடையே சிறப்பு மின்கதவு தடுப்பான்கள் இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மெட்ரோவில் அமைக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதையில் வெள்ள பாதிப்பைத் தடுக்க சிறப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com