ஆளெடுப்பு செய்தி பொய்.....: சென்னை மெட்ரோ விளக்கம்
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் சென்னை மெட்ரோவில் பணியாற்ற ஆள் எடுப்பதாக வரும் தகவல் உண்மையானது அல்ல என சென்னை மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மெட்ரோவில் ஏதாவது பணிக்கு ஆள் எடுப்பதென்றால் அதுதொடர்பான விளம்பரம் செய்தித்தாள்களிலும், சென்னை மெட்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் வெளியிடப்படும். எனவே மெட்ரோவில் பணியாற்ற காத்திருப்போர் மெட்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையே பார்க்கலாம். தற்போது ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மெட்ரோவில் பணியாற்ற ஆள் எடுப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. இது உண்மையானது அல்ல. எனவே பொதுமக்கள் யாரும், யாரிடம் சமூகவலைத்தளங்களில் வரும் செய்திகளை நம்பி ஏமாந்து விட வேண்டாம். ஒருவேளை அப்படி ஏமாந்தால் அதனால் ஏற்படும் இழப்புகளுக்கு மெட்ரோ நிர்வாகம் பொறுப்பேற்காது என தெரிவித்துள்ளது.