"சேதத்திற்கு நாங்க பொறுப்பல்ல” பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷன் பார்க்கிங் தற்காலிகமாக மூடல் - சென்னை மெட்ரோ

பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷன் பார்க்கிங் டிசம்பர் 5ஆம் தேதிவரை தற்காலிகமாக மூடப்படவிருப்பதாகவும், பயணிகள் தங்களின் வாகனங்களை விரைவில் அகற்றுமாறும் சென்னை மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது.
st thomas metro station
st thomas metro stationweb

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை காரணமாக அதிகப்படியான மழை இருக்கும் என்பதால் பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷன் வாகனங்கள் நிறுத்திமிடம் தற்காலிகமாக மூடப்படவிருப்பதாக சென்னை மெட்ரோ நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது. டிசம்பர் 5ஆம் தேதி காலை 10 மணிவரை மூடப்படவிருப்பதாகவும், விரைவில் பயணிகள் தங்களுடைய வாகனங்களை அகற்றும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷன் பார்க்கிங் தற்காலிகமாக மூடல்!

சென்னை மெட்ரோ வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், “ பரங்கிமலை மெட்ரோ ஸ்டேஷன் தற்காலிகமாக டிசம்பர் 5,2023, 10:00 am வரை மூடப்படும்.

Metro Station Parking
Metro Station Parking

கனமழை காரணமாக, டிசம்பர் 5ஆம் தேதி காலை 10:00 மணி வரை செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ நிலையத்தில் வாகன நிறுத்துமிடம் தற்காலிகமாக மூடப்படும். இந்த காலகட்டத்தில் பயணிகள் அனைவரும், அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ மற்றும் நங்கநல்லூர் சாலை நிலையங்களில் உள்ள வாகன நிறுத்துமிடத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செயின்ட் தாமஸ் மவுண்ட் மெட்ரோ ஸ்டேஷனில் ஏற்கனவே நிறுத்தியிருக்கும் பயணிகள் தங்கள் வாகனங்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவற்றை விரைவில் அகற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று அதிகாரப்பூர்வ X வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com