தமிழ்நாடு
நீலகிரி, கோவையில் கனமழை தொடரும்: 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவையில் கனமழை தொடரும்: 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
மேற்குத்தொடர்ச்சி மலையை உள்ளடக்கிய நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தேனி, திண்டுக்கல், சேலம், தென்காசி, கன்னியாகுமரி, நெல்லை, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய பத்து மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.

