தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
Published on

தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர்,
அரியலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் எனவும் கூறுப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com