சென்னை வானிலை ஆய்வு மையம் | அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை!

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்முகநூல்

சமீப காலமாக நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் வெப்ப அலையும் வீசி வருவதால் பொதுமக்கள் அசவுகரியமான சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். வடக்கு மற்றும் மத்திய மாநிலங்களில் ஓரிரு நாட்களுக்கு முன்பு பெய்த பரவலான மழை காரணமாக இதமான சூழல் நிலவியது.

இந்நிலையில் தமிழ்நாடு உட்பட 6 மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போலவே உலக வானிலை ஆய்வு அமைப்பானது தொடர்ச்சியாக 5 தினங்கள் அல்லது அதற்கு மேல் இயல்பு வெப்பநிலையை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் போது வெப்ப அலை ஏற்படும் என வரையறை செய்துள்ளது.

இந்நிலையில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வுமையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் நேற்று (ஏப்ரல் 22ம் தேதி) வெளியிட்டுள்ளார். அதை காணலாம்...

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

22.04.2024 முதல் 28.04.2024 வரை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சுட்டெரிக்கும் வெயில்.. இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயரும்

அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

22.04.2024 முதல் 26.04.2024 வரை:

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 2° – 3° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39°–41° செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34°–38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

ஈரப்பதம்:

22.04.2024 முதல் 26.04.2024 வரை:

காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 40-75 % ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 50-85 % ஆகவும் இருக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை வானிலை ஆய்வு மையம்
அதிகரித்த வெப்ப அலை; வாசித்து கொண்டிருக்கும்போதே மயங்கி விழுந்த தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்!

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

இந்திய வானிலை ஆய்வு
இந்திய வானிலை ஆய்வு முகநூல்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

ஏப்ரல் 24 வரை நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.

மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com