தமிழகத்தில் எந்த இடத்தில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் எந்த இடத்தில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் எந்த இடத்தில் எல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் தகவல்
Published on

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வேளாங்கண்ணியில் 13 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது எனவும் இன்றும், நாளையும் லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது. இதேபோன்று தமிழகத்தில் நாளை சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சை, பெரம்பலூர், நாமக்கல் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com