\
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
Published on

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அனைத்து மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை‌ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, விழுப்புரம், கடலூர், தூத்துக்குடி, நெல்லை, நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், மீனவர்கள் மாலத்தீவு, லட்சத்தீவு,‌ கேரள கடற்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com