\
“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்

“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்

“புதுச்சேரி போன்று சென்னை யூனியன் பிரதேசமாகலாம்” - சீமான் யூகம்
Published on

பாரதிய ஜனதா அரசு காஷ்மீரைப் போல தமிழ்நாட்டையும் இரண்டாக உடைக்கும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரிக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் காஷ்மீர் போல தமிழகத்தை பாஜக உடைக்கலாம். ஏனென்றால் சாதிக் கட்சிகளை பாஜகவினர் அதிகம் நம்புவார்கள். எனவே அவர்கள் வட தமிழகம், தென் தமிழகம் எனப் பிரித்து, சென்னையை புதுச்சேரி போன்று யூனியன் பிரதேசமாக அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது.

ஆனால் அது அவசியமற்றது. நியாயமாக அவர்கள் பிரிக்க வேண்டியது உத்தரப் பிரதேசத்தைதான். 403 தொகுதிகளை பெரிய மாநிலமான அதைத்தான் பாஜக பிரிக்க வேண்டும்” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com