சென்னை: மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம் - மின்விளக்கு அலங்காரம் செய்த கணவருக்கு நேர்ந்த விபரீதம்

சென்னை மேற்கு மாம்பலத்தில் மனைவியின் பிறந்தநாளுக்கு சீரியல் பல்ப் செட்டிங் செய்தபோது மின்சாரம் தாக்கி தொழிலதிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பிறந்தநாள் டெகரேஷனின்போது மின்சாரம் தாக்கி கணவன் மரணம்
பிறந்தநாள் டெகரேஷனின்போது மின்சாரம் தாக்கி கணவன் மரணம்கோப்புப்படம்

சென்னை மேற்கு மாம்பலம், பிருந்தாவனம் தெருவைச் சேர்ந்தவர் அகஸ்டின் பால் (29). இவர் சொந்தமாக பார்சல் சர்வீஸ் நடத்தி வந்திருக்கிறார். இவரது மனைவி கீர்த்திக்கு நேற்று 25-வது பிறந்தநாள் என்பதால், அதை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அகஸ்டின் பால், நேற்று மாலை வீடு முழுவதும் சீரியல் பல்ப் அமைத்து அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கோப்புப்படம்

அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பிறந்தநாள் டெகரேஷனின்போது மின்சாரம் தாக்கி கணவன் மரணம்
செங்கல்பட்டு: கார் மீது லாரி மோதிய விபத்து - சிறுவன் உட்பட இரண்டு பேர் உயிரிழப்பு

இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அகஸ்டின் பால், கீர்த்தி தம்பதிக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com