பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்: சென்னையின் மறுபக்கம்

பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்: சென்னையின் மறுபக்கம்

பைக்கில் சடலத்தை எடுத்துச் சென்ற அவலம்: சென்னையின் மறுபக்கம்
Published on

சென்னையில் வறுமையின் காரணமாக இறந்தவரின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து மயானத்திற்கு எடுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். விவசாயியான இவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்கள் சென்னையில் வேலை செய்து வந்ததால் கிராமத்தில் இருந்த இவர்களது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்துள்ளது. இவர்களுடன் கண்ணனின் தாயாரும் வசிந்து வந்துள்ளார். கண்ணனின் மூத்த மகன் அருண்குமார் கால் டாக்சி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரது இளைய மகன் அஜீத்குமார் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையில் இவரது மூத்த மகன் அருண் குமார் காதல் திருமணம் செய்து கொண்டு சென்று விட்டதாகவும் அதன் பின் குடும்பத்தினருடன் தொடர்பில் இல்லை எனத் தெரிகிறது. இளைய மகனின் வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.இவர்களது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்துள்ளது

இந்நிலையில் கண்ணனின் தாயார் புவனேஸ்வரி (85) கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணமடைந்து விட்டார்.உடலை அடக்கம் செய்வதற்கு கூட குடும்பத்தினரிடன் பணம் இல்லை. உறவினர்களிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால் யாரும் இவர்களுக்கு உதவ முன் வரவில்லை. இதனையடுத்து வேறுவழியின்றி அதிகாலை 4மணியளவில் இருசக்கர வாகனத்தில் மூதாட்டியின் உடலை எடுத்துக்கொண்டு மிகவும் சிரமப்பட்டு மயானத்திற்கு கொண்டு சென்றனர். இதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.கண்ணன் தன்னுடைய இயலாமையையும், குடும்ப வறுமையையும் காவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து மூதாட்டியின் உடலை நல்லடக்கம் செய்ய காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com