\
நடுரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாகனம்.. சோதனை செய்த போது ஷாக் ஆன போலீசார்!

நடுரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாகனம்.. சோதனை செய்த போது ஷாக் ஆன போலீசார்!

நடுரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாகனம்.. சோதனை செய்த போது ஷாக் ஆன போலீசார்!
Published on

வாகன சோதனையில் மூட்டையில் சிக்கிய மலேசிய நாட்டு நாணயங்களை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை எழும்பூர் பகுதியில் நேற்றிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதோடு ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர். அப்போது பி.வி.செழியன் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் சரக்கு வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் அதனை சோதனை செய்து பார்த்தனர்.

அப்போது அதில் சிறிய சிறிய மூட்டைகளாக 25 மூட்டைகளில் மலேசிய நாட்டு நாணயங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்த எழும்பூர் போலீசார், மலேசிய நாட்டு நாணயங்களை கொண்டு வந்த செழியன் சாலையைச் சேர்ந்த ஆசிப் மற்றும் வாகன ஓட்டுனர் பாபு ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

25 சிறிய சிறிய மூட்டையில் உள்ள மலேசிய நாட்டு நாணயங்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இவர்கள் யாருக்கு எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எழும்பூர் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணை செய்ய உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com