“செல்லப்பிராணிகளின் தீவனக் கடைகள் செயல்பட அனுமதி தேவை” - விலங்குகள் நல வாரியம்

“செல்லப்பிராணிகளின் தீவனக் கடைகள் செயல்பட அனுமதி தேவை” - விலங்குகள் நல வாரியம்
“செல்லப்பிராணிகளின் தீவனக் கடைகள் செயல்பட அனுமதி தேவை” - விலங்குகள் நல வாரியம்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் விலங்கு தங்குமிடம் மற்றும் செல்லப்பிராணி கடைகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்குமாறு மாநில விலங்குகள் நல வாரியம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முழு பொதுமுடக்கம அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாகக் காயமடைந்த விலங்குகளுக்குச் சேவை செய்வதில் பல விலங்கு நல ஆர்வலர்கள் சிரமங்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், விலங்கு மற்றும் கால்நடைகள் தங்குமிடங்கள் செயல்பட அனுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் இயக்குநர் ஏ.ஞானசேகரன் எழுதியுள்ள கடிதத்தில், “அனைத்து கால்நடை நிறுவனங்களும் செயல்பட அனுமதிக்கப்பட வேண்டும். பொதுமுடக்க கட்டுப்பாடுகளிலிருந்து இந்த தளர்வுகளை அமல்படுத்த வேண்டும். இந்திய அரசு இணைச் செயலாளர், தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், இந்திய விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும் இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளேன்.

விலங்குகளுக்குப் பாதுகாப்பு மற்றும் பிற சுகாதார சேவைகளைக் கருத்தில் கொண்டு அனைத்து விலங்குகள் தங்குமிடங்கள் செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கான ஊழியர்கள் தகுந்த அடையாள அட்டையுடன் வேலையில் ஈடுபட அனுமதிக்கப்படலாம். தவிர, கால்நடை மற்றும் கோழி தீவனக் கடைகளையும் இயக்க அனுமதிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com