\
சென்னையிலிருந்து பாகிஸ்தானிற்கு உளவு வேலை - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சென்னையிலிருந்து பாகிஸ்தானிற்கு உளவு வேலை - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை

சென்னையிலிருந்து பாகிஸ்தானிற்கு உளவு வேலை - இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறை
Published on

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னை வளசரவாக்கத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சென்னை வளசரவாக்கத்தில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராஜனை கடந்த 2013ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு சிறப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செந்தூர்பாண்டி, இன்று தீர்ப்பு வழங்கினார். அதன்படி, பாகிஸ்தானிற்கு உளவு பார்த்ததாக அருண் செல்வராஜனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் ரூ.20 ஆயிரம் அபராதமும், அவரை அவரது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீல் பிள்ளை ஆஜராகி வாதாடினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com